தமிழ்நாடு

TNPSC Diploma/ITI தேர்வு Hall Ticket வெளியீடு! நவம்பர் 22–24 தேர்வுக்கு Download செய்வது எப்படி?

தேர்வர்களுக்கான தேதி, தேர்வு நேரம் மற்றும் தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்...

Mahalakshmi Somasundaram

தமிழக அரசுப் பணிகளில் சேர்வதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் (Combined Technical Services Examination) டிப்ளமோ மற்றும் ஐடிஐ நிலைப் பணிகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நவம்பர் 22 முதல் 24-ம் தேதி வரை கணினி வழியில் நடைபெற உள்ள தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

எந்தெந்த தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது?

TNPSC அறிவிப்பு எண் 06/2026-ன் கீழ் டிப்ளமோ மற்றும் ஐடிஐ கல்வித் தகுதி கொண்டவர்களுக்கான பல்வேறு தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வுகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, நவம்பர் 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் காலை மற்றும் பிற்பகல் என இரு அமர்வுகளிலும் கணினி வழித் தேர்வு (CBT) நடைபெற உள்ளது. தேர்வர்களுக்கான தேதி, தேர்வு நேரம் மற்றும் தேர்வு மையம் உள்ளிட்ட விவரங்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Hall Ticket Download செய்வது எப்படி?

முதலில் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் உள்ள Combined Technical Services Examination (Diploma/ITI Level) – Notification No. 06/2026 என்ற தேர்வுப் பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதில் இடம்பெற்றுள்ள Hall Ticket இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். One Time Registration (OTR) Dashboard வழியாக உள்நுழைய வேண்டும். விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். திரையில் தோன்றும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேர்வர்கள் கவனத்திற்கு!

ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு தேதி, நேரம் மற்றும் மையத்தின் முகவரியை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும். தேர்வு நாளன்று ஹால் டிக்கெட்டுடன் தேவையான அடையாள ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும். ஹால் டிக்கெட் அஞ்சல் மூலம் அனுப்பப்படாது என்பதால், தேர்வர்கள் இணையதளம் வாயிலாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.