தமிழ்நாடு

'டிஎன்பிஎஸ்சி செயலாளா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

Malaimurasu Seithigal TV

 திண்டுக்கல் பழனி தாலுக்கா,மேட்டுப்பட்டி,  லக்ஷ்மணகுமார்,  என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 

"நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன், இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளேன்.  21.07.2022 அன்று டிஎன்பிஎஸ்சி  குரூப் 1 தேர்வுக்கு  92 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது.முதல்நிலைத் தேர்வு 19.11.2022 அன்று நடந்தது".  

"இந்தச் சூழ்நிலையில் முதல்நிலைத் தேர்வு  முடிந்து  10 நாட்களுக்குப்பிறகு 28/11/22. உத்தேச  வினா விடை  வெளியிடப்பட்டது. 
வெளியிடப்பட்ட உத்தேச  வினா -விடைகளுக்கு ஆட்சேபனை இருந்தால், தவறுகள் இ ருந்தால் இது குறித்து 7 நாட்களில் டிஎன்பிஎஸ்சிக்கு  ஆன் லைன் மூலம் விண்ணப் பிக்க கோரப்பட்டது". 

"இதை தொடர்ந்து நான்,   05.12.2023 அன்று நான்  19 கேள்விகளின் விடை தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது என்று நான் ஆதாரத்துடன்   விண்ணப்பித்தேன்.
 உத்தேச வினாவிடை குறித்து என்னுடைய ஆட்சேபனை குறித்து, வல்லுநர் குழு எந்த பதிலும் வழங்க வில்லை  . இந்த நிலையில்,28.04.2023 அன்று முதல்நிலைத் தேர்வு முடிவுகள் டிஎன்பிசியால்   வெளியிடப்பட்டு உள்ளது. அவர்கள் தங்களுடைய ஆவனங்களை பதிவேற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளனர்.நான் தேர்வு செய்யப்படவில்லை". 

"குரூப் 1 மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்   சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கோரப்பட்டு உள்ளனர். எனவே,உத்தேச வினாவிடை குறித்து என்னுடைய ஆட்சேபனை குறித்து, வல்லுநர் குழு எந்த பதிலும் வழங்காமல் முதல் நிலை தேர்வுகள் முடிவு வெளியிடப்பட்டு உள்ளதால், என் போன்றோர் முதன்மை தேர்வுக்கு தகுதிபெற வில்லை. இது போல் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்".


"எனவே,உத்தேச வினாவிடை குறித்து என் போன்றோரின் ஆட்சேபனை குறித்து, வல்லுநர் குழுவின் இறுதி வினா விடை பட்டியல் வெளியிட வேண்டும்,அதன் பிறகு குரூப் 1 முதன்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். எனவே,. கடந்த. 28.04.2023 அன்று  92 பணியிடங்களுக்கு  நடந்த குருப் 1 முதன் நிலை தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். வினாவிற்கான விடைகளை இறுதி செய்யும் வல்லுநர் குழுவை,  டிஎன்பிஎஸ்சி நியமிக்காமல்,  உயர்கல்வி துறை நியமிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்",  என மனுவில் கூறி உள்ளார். 

இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து, டிஎன்பிஎஸ்சி   செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.