தமிழ்நாடு

தொடர் ஆன்மிக சுற்றுப்பயணம்.. சசிகலா கனவு நினைவாகுமா? இப்போ எங்க?

Tamil Selvi Selvakumar

திண்டிவனம் அருகேயுள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய சென்ற சசிகலாவுக்கு தொண்டர்கள் அதிமுக கொடியுடன் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈபிஎஸ்ஸின் பிடியில் இருக்கும் அதிமுகவை கைப்பற்ற சசிகலா கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

அதன்படி, இன்று திண்டிவனம் வழியாக மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மற்றும் மயிலம் முருகன் கோவிலுக்கும் சென்று சிறப்பு  தரிசனம் மேற்கொண்டார்.

முன்னதாக சசிகலா வருகையை அறிந்த அதிமுக  தொண்டர்கள் திண்டிவனம் மேம்பாலம் அருகே அதிமுக கொடியுடன், மேள தாளம் முழங்க  உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலிலும் சசிகலா வழிபாடு செய்தார்.