தமிழ்நாடு

இன்றைய தேவை சுய கட்டுப்பாடு தான்... முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..

கொரோனா எந்த அலையாக இருந்தாலும், அதனை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழக அரசுக்கு உள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Malaimurasu Seithigal TV
இன்றைய தேவை சுய கட்டுப்பாடு தான் என்பதை வலியுறுத்தும் விதமாக, தமது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், முழு ஊரடங்கு, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மருத்துவ கட்டமைப்பு, துடிப்பான நிர்வாகம் ஆகியவற்றால் தான், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக கூறியுள்ளார். கட்டுப்பாடுகளை பின்பற்றினால் எந்த அலைகளை யும் நாம் எதிர்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
மாநில பொருளாதாரம், மக்களின் தேவைகளை கருதி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், பொது போக்குவரத்து மற்றும் கூட்டம் மிகுந்த இடங்களில் டபுள் மாஸ்க் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரசை வெல்ல தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதம் மற்றும் கேடயம் என்றும், எனவே, மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.