தமிழ்நாடு

இன்றைய வானிலை அப்டேட்....! எந்தெந்த ஊர்களுக்கு எச்சரிக்கை...?

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.  கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 27.11.2022 முதல் 01.12.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 31-32 டிகிரி செல்சியச்ஸும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25  டிகிரி செல்சியஸும்  இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.