தமிழ்நாடு

சபரிமலைக்கு செல்ல தேனியில் போக்குவரத்து மாற்றம்...!

Malaimurasu Seithigal TV

தேனி மாவட்டம் வழியாக சபரிமலை ஐயப்பன் கோவில் செல்வதற்கு பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கார்த்திகை முதலாம் தேதியில் இருந்து தை மாதம் நடைபெறும் மகரஜோதி வரை தமிழ்நாடு, மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் தேனி மாவட்டம் குமுளி வழியாக சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இதையொட்டி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுப்பதற்காக தேனி மாவட்ட காவல்துறையின் சார்பில், தேனியிலிருந்து  கேரளாவை இணைக்கும் கம்பம் மெட்டு மலைச்சாலையானது ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.