தமிழ்நாடு

இலங்கை மே தின விழாவில் பங்கேற்க பயணமானார் அண்ணாமலை!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நடைபெறவுள்ள மே தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார்.

Suaif Arsath

சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் இலங்கை புறப்பட்டு சென்ற அவர்  முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது,

அண்டை நாடான இலங்கையோடு, இந்தியா என்றைக்குமே இணக்கமாக இருந்து வருகிறது என கூறினார். அந்த அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா பல்வேறு  உதவிகளை செய்து வருவதாகவும் இதற்கு நன்றி சொல்லும் விதமாக, மே 1-ல் நடத்தப்படும் மே தின விழாவுக்கு தம்மை அழைத்துள்ளனர் என்றும் கூறினார்.

தமது சுற்று பயணத்தின் போது இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் இந்திய அரசு தொடர்ந்து செய்ய வேண்டிய உதவிகள் குறித்து, அந்நாட்டு தலைவர்கள் எதிர்பார்ப்பை அறிந்து கொள்ள இருப்பதாகவும் கூறினார். பிரதமர் மோடி யின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பயனடைந்துள்ள பயனாளிகளை சந்திக்க இருப்பதாகவும் இந்திய - இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பயணம் இருக்கும் என்றும்  அவர் கூறியுள்ளார்.