வருங்காலத்தில் திருச்சி மிகப்பெரிய மையமாக மாறவுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு கூறியுள்ளார்.
திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கும் புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதையும் படிக்க : CMDA திட்டத்தில் வடசென்னைக்கு முக்கியத்துவம் - அமைச்சர் உறுதி!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, டைடில் பார்க்க போன்ற எண்ணற்ற திட்டங்கள் வர உள்ளாதால் திருவெறும்பூர் - அசூர் வரை மிகப்பெரிய வளர்ச்சியடையவுள்ளதாக கூறினார். வருங்காலத்தில் திருச்சி ஒரு மிகப்பெரிய மையமாக மாற உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.