தமிழ்நாடு

குட்டி யானையுடன் வலம் வந்த தாய் யானையுடன் செல்பி எடுக்க முயற்சி!

கோத்தகிரி அருகே சாலையில் குட்டியுடன் உல வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Malaimurasu Seithigal TV

கோத்தகிரி அருகே சாலையில் குட்டியுடன் உல வந்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியதையடுத்து, காட்டு யானைகளின் நடமாட்டம் அவ்வபோது அதிகரித்து வருகிறது. அந்தவகையில், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை, நீண்ட நேரமாக சாலையில் நின்றவாறு அசைந்து கொண்டிருந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள் சிலர், யானையுடன் செல்பி எடுக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனத்துறையினரும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.