தமிழ்நாடு

டெண்டர் முறைகேடு வழக்கில் பழனிச்சாமி தப்ப முடியாது - டி.டி.வி.தினகரன்!

Malaimurasu Seithigal TV

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் பழனிசாமி தண்டனையில் இருந்து தப்ப முடியாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்ததி பேசிய அவர், பழனிச்சாமி மீது எந்த தனிபட்ட விரோதமும் இல்லை. அனைவரும் இணக்கமாக செயல்பட வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை வரவேற்கிறேன். சில மேதாவிகள் சுவாசமே துரோகமாக  கொண்டவர்கள் நல்ல விஷயத்திற்கு ஒத்துவர மாட்டார்கள். துரோகிகள், துரோக சிந்தனை கொண்டவர்கள் திருந்தினால் தான் மற்றவர்களின் எண்ணங்கள் நிறைவேறும்.

பன்னீர்செல்வம் - பழனிச்சாமி இணைவது அத்தைக்கு மீசை முளைக்கும் கதை தான். இலக்குகளோடு பயணிக்கும் இந்த உலகத்தில் பதவிகாக பயணிக்க நினைக்கும் ஒரே தலைவன் எடப்பாடி பழனிச்சாமி தான். நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் பழனிச்சாமி தண்டனையில் இருந்து தப்ப முடியாது என கூறினார்.