Annamalai  
தமிழ்நாடு

“விஜய் 51 வயதில் பூமர் மாதிரி பேசுகிறார்..'' அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

அரசியலில் எப்போதும் அடுத்தவர்களின் பலத்தைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். விஜய் மற்றவர்களுடைய பலவீனத்தை மட்டும் தான் ...

மாலை முரசு செய்தி குழு

திருநெல்​வேலி​யில் இன்று மாலை நடை​பெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா பங்​கேற்​றுப் பேசுகிறார்.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.. அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, “2026ல் தவெக - திமுக இடையே தான் போட்டி என்று விஜய் பேசியதற்கு விஜய் அப்படி சொல்லவில்லை என்றால் அவர் கட்சி ஆரம்பித்ததில் அர்த்தம் இல்லாமல் போய்விடும். இதை நான் தவறாக பார்க்கவில்லை. 

அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களின் எதிரி திமுக என்று சொல்வது மக்களின் மனநிலையை பிரதிபலிக்கின்றனர். விஜயின் அரசியல் வருகையை வரவேற்றாலும் சித்தாந்தத்தில் நேர் எதிராக இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் எங்களுடன் ஒற்றுமையாக இருக்கின்றனர்.

அரசியலில் எப்போதும் அடுத்தவர்களின் பலத்தைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். விஜய் மற்றவர்களுடைய பலவீனத்தை மட்டும் தான் பேசியிருக்கிறார். அவருடைய பலத்தை பற்றி பேசவில்லை. பொதுமக்கள் பாஜகவை ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். மக்கள் கடந்த தேர்தலில் 18 சதவீதம் தேசிய ஜனநாயககூட்டணிக்கு வாக்களித்தனர். தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் பாஜக மீதும் பிரதமர் மீதும் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ள்னர். 

விஜயை பொறுத்தவரை இன்று மக்கள் வரலாம்  ரேம்வாக் வரும்போது கை தட்டலாம். ஆனால் வாக்களிக்கும் போது மக்கள் யோசிப்பார்கள்.  இவர் ஐந்தாண்டுகள் அரசியலில் தாக்குபிடிப்பாரா?  என்று பார்ப்பார்கள் வாக்காக மாறும்போது மக்கள் நிறைய யோசிப்பார்கள் . கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் எங்கேயும் கொடுக்கப்படாத நிதி தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது 

திமுகவினருக்கு எதைப் பார்த்தாலும் பயம்.  தெனாலி பட  கமல் போன்று மோடியை பார்த்தால் பயம். அமித்ஷாவை பார்த்தால் பயம். பாராளுமன்றத்தில் புதிய சட்டத்தை பார்த்தால் பயம். தொடர்ந்து பயத்திலேயே தமிழகத்தின் திமுக அரசும் ஆட்சியின் கட்சியில் இருக்கிறது.  அமித்ஷாவை வரவேற்று திமுகவினர் போஸ்டர் ஒட்டப்போவது கிடையாது. உள்துறை அமைச்சரின் பயணத்தை பார்த்து பயந்து போய் திமுக போஸ்டர் ஒட்டியுள்ளனர். 

விஜய் படத்தில் நடித்துக்கொண்டே இருந்தார். மீனவ நண்பனாக கூட நடித்தார் அப்போதெல்லாம் கட்சதீவை பற்றி பேசவில்லை. அது இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம். கச்சத்தீவை பற்றி பேசாமல் இருந்துவிட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேசுகிறார். ஆனால் நாங்கள் செய்வோம கட்சத்தீவு மீட்டுக் கொடுங்கள் என்று எழுதிக் கொடுத்து வந்துள்ளோம்.  விஜய் ஒரு மேடை இருக்கிறது என்பதற்காக கட்சதீவை பற்றி பேசுவேன் என்று பேசுகிறார்.  

வடிவேலு சீல் பட்டையை போட்டுக்கொண்டு காலையில் ஆட்டோ ஓட்ட செல்வதும் மாலையில் மது அருந்துவது போல அரசியலுக்கு வருவதற்கு முன்பாக ஒரு மாதிரியும் அரசியலுக்கு வந்த பிறகு ஒரு மாதிரியும் விஜய் பேசுகிறார் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை தொடர்ந்து பாஜக அரசு மீட்டு வருகிறது. விஜய்க்கு தெரியுமா?  மீட்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு செலவில் டிக்கெட் எடுத்து வீட்டிற்கு கூட்டி வருகிறது 

மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை குறைவு என்று விஜய்க்கு தெரியுமா? புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் கொஞ்சம் படிக்க வேண்டும் . பிறகு மக்கள் எப்படி விஜய்யை மாற்றமாக பார்ப்பார்கள். 

இந்தியன் என்று சொன்னால் இன்று மேலை நாடுகள் தலைநிமிர்ந்து பார்க்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மோடி தான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை. நம்மை பாதுகாக்கும் காவல்துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை. வெட்டி கொலை செய்கின்றனர். 

மக்கள் இந்த முறை வாக்களிக்கும் போது மக்களை பாதிக்கக்கூடிய திடகாத்திரமான அரசு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் முதல்வரை மேடையில் வைத்து மாமா என்று விஜய் பேசி இருப்பது நன்றாக இருக்காது. விஜய் 51 வயதில் பூமர் மாதிரி பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் விஜய்க்கு மனது கஷ்டப்படுமா படாதா

வார்த்தைகளை பொது இடத்தில் பயன்படுத்தும் போது பக்குவமாக பேச வேண்டும் என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.