"தவெக எண்ணம் நிச்சயம் ஈடேறாது.. சட்டம் ஒழுங்கு, நிர்வாக சீரக்கெட்டை மறைக்க.." அன்பில் மகேஷ் கைதுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு! 
தமிழ்நாடு

"தவெக எண்ணம் நிச்சயம் ஈடேறாது.. சட்டம் ஒழுங்கு, நிர்வாக சீர்கேட்டை மறைக்க.." அன்பில் மகேஷ் கைது.. கொதித்த ஸ்டாலின்!

அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார்.

Antony Ajay R

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு, DTCP அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், "அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.

அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!" எனக் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்