தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகிக்கொண்டிருக்கிறது விஜய்யின் தவெக-கட்சி. தமிழ்நாடு முழவதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் பூத் கமிட்டியை பலப்படுத்த அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது..
இதற்காக தமிழ் நாடு முழுக்க 70,000 உறுப்பினர்களுடன் 35,000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்த பின்பு கமிட்டியை பலப்படுத்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. இந்த பூத் கமிட்டி மாநாட்டை மொத்தமாக அல்லாமல் தனித்தனியாக நடத்த திட்டமிட்டனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டை 5 மண்டலங்களாக பிரித்து மாநாடு நடத்துகின்றனர்.
இதில் முதல்கட்டமாக கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளாகிய கொங்கு மண்டல பூத் கமிட்டி மாநாட்டிற்காக இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் காலை தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு விஜயை காண வந்த ஏராளாமான தொண்டர்கள், ரசிகர்கள் நிர்வாகிகள் விஜய்க்கு உற்சாக வரவேற்பளித்தனர். அதில் ஒரு தொண்டர் விஜய் வந்த பிரச்சார வாகனத்தின் மீதேறினார், அப்போது கட்சி துண்டை அவர் கழுத்தில் போட்ட உடன் அவர் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
அங்கு நிறைந்த பெருங்கூட்டத்தால் விமான நிலையமே ஸ்தம்பித்து நின்றது.. அந்த பகுதி முழுவதுமே போக்குவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்