தேனி சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. முதல் நாளிலேயே 13 பேர் பிடிபட்ட நிலையில் இரண்டு நாட்களுக்குள் 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தவெக அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது தவெக ஐடி விங். அதில் திமுகவை கடுமையாக சாடியுள்ளது.
அந்த பதிவில், "தேனி சிறையிலிருந்து தப்பிய 17 சிறைவாசிகளையும் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு இரண்டு நாட்களுக்குள் கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்தத் துரிதமான செயல்பாடு பாராட்டுக்குரியது!" எனப் பெருமிதம் கொண்டுள்ளது தவெக ஐடி விங்.
தொடர்ந்து, "இப்போது சிறைவாசிகள் தப்பித்ததைக் கொண்டாடிக் கூச்சலிட்டுக் கொக்கரிக்கும் திமுகவினருக்கு, தங்கள் ஆட்சியின் இலட்சணத்தைச் சற்றே நினைவூட்டுவோம்.
சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில்,
வேலூர் மத்திய சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்ய மூன்று ஆண்டுகள் ஆனது.
ஜூலை 2022-ல் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிய ஒருவரைக் கைது செய்யப் பிப்ரவரி 2023 வரை, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆனது.
தனது ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை மறந்துவிட்டு, இன்று சட்டம் ஒழுங்கு குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் Dummy Daddy, தனது ஆட்சியின் இலட்சணத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும்!
Shooting-ல் Action என்றவுடன் நடித்து, Cut என்றவுடன் நிறுத்தி, அடுத்த Script-க்காகக் காத்திருந்து ஆட்சி நடத்தியவருக்கு இப்படித்தான் எதுவுமே தெரியாமல் இருக்கும்!" எனப் பதிவிடப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்