தமிழ்நாடு 2026 தேர்தலை நெருங்கியுள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தும் நடைபெற்று வருகிறது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்தை தெரிவித்து வந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இது குறித்து பேசி வீடியோ பதிவிட்டு மக்களுக்கு விழுப்புணர்வு செய்துள்ளார். அந்த வீடியோவில் “இந்திய அரசியல் சாசனம் நம்ம எல்லாருக்கும் கொடுத்திருக்கும் உரிமைகளில் ஓட்டுரிமை என்பது மிகவும் முக்கியமானது. ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான அடையாளங்களில் அவருடைய ஓட்டுரிமை மிகவும் முக்கியமானது.
‘ஓட்டு என்பது நமது உரிமை மட்டும் இல்லை அது வாழ்க்கை’ நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? கொஞ்சம் ஏமாந்தால் நான் நீங்கள் என இல்லை அனைவருக்கும் இந்த நிலைமைதான். நான் பயப்படுவதற்கு இதை சொல்லவில்லை, இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நாம் கவனமாக கையாளவேண்டும். இந்த திருத்தம் நம்ம தமிழ்நாட்டில் எப்படி வேலை செய்ய போகிறது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர் இவங்க தான் வீடு வீடா போய் அந்த படிவத்தை கொடுப்பாங்க நம்ம அந்த படிவத்தை நிரப்பி கொடுத்த பிறகு அதை தேர்தல் ஆணையத்தில் பரிசோதித்து புதிய வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அந்த வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இல்லை என்றால் அதற்கு ஒரு தனி செயல்முறைப்படி விண்ணப்பிக்கவேண்டும். மேலும் புதிய வாக்காளர்கள் அவர்களுக்கென தனியான படிவங்களை வாங்கி நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். முதலில் அனைவரும் அவரவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்கள் வரவில்லை என்றால் கேட்டு வாங்கி விண்ணப்பங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஆன்லைன் மூலம் உங்களுக்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்க முடியும். இந்த அனைத்து செயல்முறைகளையும் மிகவும் கவனமாக கையாளுங்கள். அனைத்திலும் தவறு செய்யும் அரசு இதை மட்டும் சரியாகவா? செய்து விடும்” எனத்தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.