தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருவர் நியமனம் - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக இரண்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Suaif Arsath

அரசு வழக்கறிஞர்களாக இருந்த 6 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. இந்த நிலையில் சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதிகளாக மாலா, சவுந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

இதன்மூலம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதுடன், நீதிபதிகள் காலியிடங்களும் 14 ஆக குறைந்துள்ளது.