ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் மற்றும் லதா தம்பதியினர். இவர்களுக்கு நிறைமதி (10) என்ற மகளும் வயது பாலபிரவின் (6) என்ற மகனும் உள்ளனர்.
இரு குழந்தைகளும், அச்சங்குளம் கிராமத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அங்கு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்சாரகம்பி (wire) அறுந்து விழுந்ததை கவனிக்காமல் தம்பி பால பிரவீன் அந்த கம்பியை தொட்டுள்ளார். குழந்தை ஒயரை (wire) தொட்டவுடன் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளன் பிரவீன்.
இந்நிலையில் தனது தம்பிக்கு என்ன நடக்கிறது என தெரியாமல் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார் நிறைமதி. அக்கா தனது தம்பியை தொட்டு துக்க முயன்ற போது இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதை பார்த்து பதறி போன, அருகில் இருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து அபிராமம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா தம்பி இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த குழந்தைகளின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுவது பரிதாபத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் மற்றுமின்றி ஒரே ஊரே இரு குழந்தைகளின் இழப்பை ஏற்க முடியாமல் கதறி அழுகின்ற காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு: வருகின்ற காலம் மழைக்காலம் என்பதால் குழந்தைகளை தனியே விளையாட அனுமதிக்காதீர்கள். மேலும் அவர்களிடம் மின்சார ஆபத்து, வெள்ள ஆபத்து, விலங்குகள் மற்றும் தெரியாத நபர்களிடம் பழகுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். குழந்தைகளுக்கு பாதுகாப்பான உடை மற்றும் செருப்புகளை அணிந்து விளையாட அனுமதியுங்கள். குறிப்பாக பாதுகாப்பான நபர் மற்றும் பாதுகாப்பான சூழலில் மட்டும் குழந்தைகளை அறிமுகப்படுத்துங்கள். இது போன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க உள்ளூர் பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கையை கொண்டு செல்லுங்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்