தமிழ்நாடு

சிறையிலிருந்து வெளியான இருவர்…நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!

Malaimurasu Seithigal TV

வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்தியசிறையிலிருந்து முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த ஆனந்தன், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சிவராஜ், ஆகியோர் முன் விடுதலை செய்யபட்டனர்.

இன்று அரசின் முன்விடுதலை பெற்று இரண்டு ஆயுள் தண்டனை சிறவாசிகள் சிறப்பு தண்டனை குறைப்பு பெற்று விடுதலை செய்யப்பட்டு இன்று விடுதலையான சிறாவசிகள் இரண்டு பேரின் மறுவாழ்விற்காக தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் அத்தியாவசிய உணவு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான விஜயராகவலு, தலைமையில். வேலூர் சரக சிறைத்துறை துணைத்தலைவர். செந்தாமரைக் கண்ணன், அவர்கள் விடுதலையான சிறைவாசிகளுக்கு மறுவாழ்விற்கான உதவிகள் வழங்கினார். உடன் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சீனிவாசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 முன் விடுதலைக்கான ஆணைகளை வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் எ.எஸ்.அப்துல் ரஹ்மான் வழங்கினார். மறுவாழ்விற்கான உதவிகள்முன்விடுதலையான சிறைவாசிகளுக்கு அரசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மாவு உள்ளிட்ட 21 வகையான மளிகை பொருட்களும், வேட்டி சட்டை உள்ளிட்ட ஆடைகளும் வழங்கப்பட்டன