தமிழ்நாடு

கோவளம், புதுச்சேரி கடற்கரைக்கு நீலக்கொடி சான்று..!!!

தமிழகத்தில் உள்ள கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்று கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் உள்ள கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்று கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி, நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, கடற்கரை  பாதுகாப்பு உள்ளிட்ட 33 அம்சங்களின் அடிப்படையில் தூய்மையான சுற்றுச்சூழலை கொண்ட கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழை, டென்மார்க்கின் சுற்றுச்சூழல் கல்வி அமைப்பு வழங்கி வருகிறது.

அந்தவரிசையில் ஏற்கனவே இந்தியாவின் ஒடிசா, ஆந்திரா, குஜராத் உள்பட 8 மாநில கடற்கரைகளுக்கு இந்த சான்று வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக தமிழகத்தில் உள்ள கோவளம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு இந்த சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை டிவிட்டரில் உறுதி செய்துள்ள மத்திய சுற்றுசூழல் துறை இணை அமைச்சர் புபேந்திர யாதவ், இது பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் மற்றொரு மைல் கல்லாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.