தமிழ்நாடு

VAO கொடூரக் கொலை வழக்கில் இருவர் கைது...!

Tamil Selvi Selvakumar

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் கும்பலுக்கு எதிராக புகார் அளித்ததால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட ராம்சுப்பு என்பவர் கைதுசெய்யப்பட்டார். மேலும் வழக்கில் தொடர்புடைய மாரிமுத்து என்ற நபர் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார். 

இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் செல்வமுருகன் தலைமையில் வி.ஏ.ஒ. லூர்து பிரான்சிஸின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே மற்றொரு குற்றவாளியான மாரிமுத்துவை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையிலான 4 தனிப்படை போலீசார் நெல்லையில் வைத்து கைது செய்தனர். 

இந்த கொலை சம்பவத்தால் தூத்துக்குடியில் தொடர் பதற்றம் நிலவி வருவதால், முறப்பநாடு, வல்லநாடு, கலியாவூர், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.