தமிழ்நாடு

உணவுப்பொருள் கடத்தலை தடுக்க இரு சக்கர வாகன ரோந்துப் பணி தொடக்கம்..!

தமிழக கேரள எல்லையில் உணவுப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக இரு சக்கர வாகனத்தின் ரோந்துப் பணியை, மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

Malaimurasu Seithigal TV

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை காவல்நிலையத்தில், 24 மணிநேரமும் ரோந்துபணி மேற்கொள்ள இருசக்கர வாகனத்தை வழங்கி, மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

காவல் நிலைய போலீசார் இரு சக்கர வாகனத்தில் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொள்வதால், உணவு பொருளை கடத்துபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக 74 18 44 64 69 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுப்பர். மேலும் போலீசார் உதவுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டனர். அதோடு தகவல் தெரிவிக்கும் பொதுமக்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்தனர்.