தமிழ்நாடு

"உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்" - ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானம்!

திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் எம்எல்ஏ மற்றும் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என ஒருமனதாக சிறப்புத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tamil Selvi Selvakumar

திருச்சியில் உள்ள திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழாவை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் கொண்டாட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.