சனாதன எதிர்ப்பு  சனாதன எதிர்ப்பு
தமிழ்நாடு

"எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம்" - சனாதன எதிர்ப்பு குறித்து விளக்கம்! எதிர்ப்பு வழுக்கு நிலையில் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

திமுகவின் நச்சு அரசியல், இந்துக்களுக்கு எதிரான சொல்லாடல்கள், ஊழல் மற்றும் வாரிசு அரசியல் ஆகிய அனைத்தையும் தமிழக மக்கள் கடுமையாக நிராகரித்துள்ளனர்.

Vinvizhi Leninton

தமிழக சட்டமன்றத்தில் சனாதன தர்மத்தை "வேரறுக்க" வேண்டும் என்ற தனது கருத்தை முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அன்று வலியுறுத்தினார். தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆற்றிய உரையில், தமிழ் வாழ்த்துப் பாடலான “தமிழ்த் தாய் வாழ்த்து” பாடலைப் புறக்கணிக்கும் எந்தவொரு முயற்சியையும் எதிர்க்கட்சி அனுமதிக்காது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். மேலும், "மக்களைப் பிரிக்கும் சனாதன தர்மம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார். இதனையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது அது குறித்து ஒரு விளக்கத்தை தனது X பக்கத்தில் கொடுத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்திற்கு,பாரதிய ஜனதா கட்சி செவ்வாய்க்கிழமை (மே 12) தனது கண்டனத்தை தெரிவித்தது. மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட் தனது X தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் , திமுகவின் நச்சு அரசியல், இந்துக்களுக்கு எதிரான சொல்லாடல்கள், ஊழல் மற்றும் வாரிசு அரசியல் ஆகிய அனைத்தையும் தமிழக மக்கள் கடுமையாக நிராகரித்துள்ளனர். ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ்-இந்திய கூட்டணி, பாரதத்தின் நாகரிக ஆன்மாவான சந்தானம் மீது விஷத்தைக் கக்குவது இது முதல் முறையல்ல. மக்கள் உங்களின் பிளவுபடுத்தும் மற்றும் அபாயகரமான கட்சியை முற்றிலுமாக ஒழிப்பதற்கு முன்பாக, உங்கள் பாரபட்சமான கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது என்று அவர் தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்தார்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின், இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி! என்று தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.