தமிழ்நாடு

சென்னை தீவுத் திடலில் உணவு திருவிழாவை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்!!

Malaimurasu Seithigal TV

சென்னை தீவுத்தடலில் சர்வதேச கைவினை, கைத்தறி, கலை மற்றும் உணவு திருவிழா கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில்  'சென்னை விழா' எனும் தலைப்பில் சர்வதேச கைவினை, கைத்தறி கலை மற்றும் உணவு திருவிழா கண்காட்சி கண்காட்சி  இன்று தொடங்கி வரும் மே மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இந்த கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அமைச்சர்கள் க.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், காந்தி, மா.சுப்ரமணியன் மற்றும் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன்,துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த கண்காட்சியில் பாரம்பரிய உணவு அரங்கு,கைவினை பொருட்கள், கைத்தறி உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகள் என மொத்தம் 311 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு 1 நுழைவு கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.  தமிழ்நாடு மகளிர் சுயஉதவி குழுக்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 70 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.