சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் வைத்து, இன்று காலை காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினரின் எதிர்ப்பையும் சலசலப்பையும் கடந்து, காவல்துறையினர் பலவந்தமாக கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். காவல்துறையை எதிர்த்தும், முதலமைச்சரை எதிர்த்தும் 'தவெக ஒழிக' என்றும் திமுகவினர் கோஷங்களை எழுப்பினார். காவல்துறையினர் வைத்த பேரிகார்டுகள் தகர்க்கப்பட்டன.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவங்களையெல்லாம் அருகில் இருந்த தனது வீட்டில் இருந்து முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் உற்றுக் கவனித்ததுடன், வீடியோ எடுத்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சஞ்சீவ் வீடியோ எடுக்கும்போது திமுகவினர் "லேடீசை ஏன் வீடியோ எடுக்குறீங்க?" என்று அவரை நோக்கி வாக்குவாதத்தில் ஈடுபடவே ஜன்னலில் இருந்து திரும்பி சென்றார்.
உதயநிதியின் கைதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபடுவதுடன், சில இடங்களில் விஜய்யின் உருவப் பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.