தமிழ்நாடு

"அடிமைகளுடன் சேர்த்து எஜமானர்களையும் விரட்டியடிப்போம்" அமைச்சர் உதயநிதி பேச்சு!!

Malaimurasu Seithigal TV

நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம் என விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

வேலூரில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா நடந்துள்ளது. அந்த விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டார். 

அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே மகளிர் உரிமை தொகை திட்டம் மிகப் பெரிய திட்டமாக இருகிறது என பெருமிதம் கொண்டார். 

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளுடன் சேர்ந்து, அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிப்போம் என தெரிவித்துள்ளார்.