தமிழ்நாடு

தடுப்பூசி வழங்குவதில் ஒன்றிய அரசு திணறி  வருகிறது.! -நிதியமைச்சர் பிடிஆர் குற்றச்சாட்டு.! 

Malaimurasu Seithigal TV

மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் ஒன்றிய அரசு திணறி வருவதாக மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 இடங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கொரைனாவை தடுப்பூசியால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும், அமெரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்பட்டதால் முககவசம் அணிய தேவையில்லாத சூழல் உருவாகி உள்ளது, மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் ஒன்றிய அரசு குளருபடி செய்துள்ளது, மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் ஒன்றிய அரசு திணறி  வருகிறது" எனத் தெரிவித்தார்.

மேலும், "தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம்  அலை கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது, தடுப்பூசியால் மட்டுமே கொரைனாவுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும், ஒரு மாதத்திற்கு உள்ளாக பல்வேறு வழிகளில் தமிழகத்திற்கு தடுப்பூசி கொண்டு வர நடவடிக்கை, 3 ஆம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிய ஆய்வு நடத்தப்பட உள்ளது" என கூறினார்.