தமிழ்நாடு

தேசத்திற்கும், தமிழகத்திற்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது... எல்.முருகன் புகழாரம்!

மணிப்பூரின் புதிய ஆளுநராக இல.கணேசன் நியமணம் செய்தது தேசத்திற்கும், தமிழகத்திற்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.  

Malaimurasu Seithigal TV

மணிப்பூரின் புதிய ஆளுநராக இல.கணேசன் நியமணம் செய்தது தேசத்திற்கும், தமிழகத்திற்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கபட்டுள்ள இல.கணேசனை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழகத்தில் பாஜகவின் வளர்க்க பாடுபட்ட மூத்த தலைவர் இல.கணேசன். அவர், தற்போது மணிப்பூரின் ஆளுநராக நியமணம் செய்யபட்டது தேசத்திற்கும், தமிழகத்திற்கும் ஒரு உத்வேகத்தை அளிக்க கூடிய ஒன்று. மணிபூரின் வளர்ச்சிக்கு அவருடைய அனுபவம் உறுதுணையாக இருக்கும். மூத்த தலைவருக்கு அங்கிகாரம் கிடைத்தது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஊக்கத்தை அளித்துள்ளது என்றார்.