தமிழ்நாடு

மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் கைக்கோர்க்கும் சென்னை பல்கலைக்கழகம் : இரட்டை பி.எஸ்.சி., படிப்பை அறிமுகம் செய்கிறது!

Tamil Selvi Selvakumar

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சென்னைப் பல்கலைக்கழகம் இரட்டை பி.எஸ்.சி, படிப்பை அறிமுகம் செய்கிறது. கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட சென்னைப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மையத்துக்கு, பல்கலைக்கழக சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் கைக்கோர்க்கும் சென்னை பல்கலைக்கழகம், அடுத்த கல்வியாண்டு முதல், ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் பயிலும் வகையில், இரட்டை பி.எஸ்.சி, படிப்பை அறிமுகம் செய்கிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் நாளை மறுநாள் சென்னையில் கையெழுத்தாகிறது