தமிழ்நாடு

திருமணமாகாத வட மாநில பெண்கள் வாடகை தாயா...? பரபரப்பு சம்பவம்...!

Malaimurasu Seithigal TV

சென்னையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்காக வெளிமாநில பெண்களை ஓரே விட்டில் அடைத்து வைத்த சம்பவம் அம்பலமாகி உள்ளது. 

சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் தனியார் கருத்தரிப்பு மருத்துவனை செயல்பட்டு வருகிறது. குழந்தை பெற இயலாத பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல், வாடகை தாய் மூலம் குழந்தை பெற வட மாநிலத்தில் இருந்து திருமணம் ஆகாத பெண்களை அழைத்து வந்து மருத்துவமனையின் அருகே தங்க வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.   

மருத்துவமனை அருகில் உள்ள குடியிருப்பு ஒன்றில், இரண்டு தளங்களில்  குஜராத், அசாம், பிஹார் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, திருமணமாகாத 25 வயதிற்கு உட்பட்ட பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து கேட்டதற்கும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் செயல் அதிகாரி முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.