தமிழ்நாடு

தமிழ்நாட்டு மீனவர்களை மீட்குமாறு டி.ஆர்.பாலு வலியுறுத்தல்...!

Tamil Selvi Selvakumar

மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை மீட்குமாறு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு  மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர், மாலத்தீவு கடலோர காவல்படையினரால் 4 நாட்களுக்கு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 28 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். 

இந்நிலையில், 12 மீனவர்களையும் 5 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரனிடம் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் வலியுறுத்தினார்.