தமிழ்நாடு

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியை சேர்க்க வலியுறுத்தல்...

தடுப்பூசிக்கு முன்பதிவுக்கான கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது

Malaimurasu Seithigal TV

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில்  தமிழ்வழியில் பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் இந்நிலை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.  தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று  இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என ஒன்றிய அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.