சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்வருகை புரிவது வழக்கம்.
இந்நிலையில் உதகையில் கோடை சீசன் நெருங்கி வரும் நிலையில், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. உதகையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான பைக்காரா படகு இல்லத்தில் விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பின்னர் பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வரிசையாக நின்று இயந்திர படகு மற்றும் அதிவேக படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் பேசுகையில், சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உதகையில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தும், அங்கு நிலவும் குளு குளு காலநிலையை அனுபவித்து மகிழ்வாகவும் தெரிவித்தனர்.