தமிழ்நாடு

இனிமேல் தட்டுப்பாடுக் கிடையாது...  அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தடுப்பூசி முகாம்...

இன்று முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொரொனா தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்தி கொள்பவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடங்கிய நாளிலிருந்து இதுவரையிலும் மொத்தமாக 2 கோடியே 28 லட்சத்து 31 ஆயிரத்து 485  தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் தடுப்பூசி மையங்களில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனை தடுப்பதற்காக பொது சுகாதாரத் துறை சார்பாக இன்று முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்காக சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

இது மட்டுமின்றி அனைத்து சுகாதார துணை இயக்குனர்கள் அரசு மருத்துவமனைகளில் வழக்கமாக முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.