தமிழகத்தில் அதிகரித்துள்ள ஆள் கடத்தல் மற்றும் பெண்கள், குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் அச்சமூட்டுவதாக பதிவிட்டுள்ளார் பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.
இதுகுறித்த அவரது பதிவில், "அடுத்தடுத்து மாயமாகும் இளம்பெண்கள், சிறுவர்கள்... தமிழகத்தில் என்ன நடக்கிறது?எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, "தமிழகத்தில் அடுத்தடுத்து பெண்கள், குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்குகள் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் பெண்கள், குழந்தைகள், சிறுவன் என சுமார் 12பேர் காணமால் போயிருப்பதாக வழக்குகள் பதிவாகி இருப்பதாக செய்திகள் தெரிவிப்பது தமிழகத்தில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
ஏற்கனவே செஞ்சி சிறுமி காணாமல் போய் ஒருமாதத்திற்கு மேலாகியும் இன்றுவரை துப்பு துலங்காமல் காவல்துறையினர் விழிபிதுங்கி வரும் வேளையில் அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களும் பெற்றோர்களிடத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று முன்தினம் கூட விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பெண்குழந்தையை இருவர் கடத்த முயன்றதாகக் கூறப்படும் நிலையில் காவல்துறை இந்த விவகாரத்தில் விழிப்புடன் இல்லாதது அஜாக்கிரதையின் வெளிப்பாடு.
குழந்தைகளுக்கு கேக் ஊட்டி மகிழும் முதலமைச்சர் அவர்கள் அக்குழந்தைகள் பாதுகாப்பில் தனது அரசும், தன்வசம் உள்ள காவல்துறையும் மெத்தனப் போக்குடன் செயல்படுவதை அறியவில்லையா?
சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை உயர்அதிகாரிகள் கூட்டத்தை நடத்திவிட்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் குற்றங்கள் குறைந்திருக்கிறது என்று அறிக்கை மட்டும் விட்டால் சட்டம் ஒழுங்கும், இதுபோன்ற சம்பவங்களும் தீர்ந்து விடுமா?
இளம்பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு இந்த அரசு பொறுப்பேற்க வேண்டமா? தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்களும் சினிமாவை மிஞ்சும் வகையில் இருப்பது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியின் ஒட்டுமொத்த தோல்வியின் வெளிப்பாடு. இந்த விவகாரத்தில் தவெக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது!" எனக் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.