தமிழ்நாடு

" வந்தே பாரத் " - புதிய இரயில் சேவை தொடக்கம்....! பிரதமர் துவங்கி வைக்கிறார்....!

Malaimurasu Seithigal TV


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னை- கோவை மார்க்கத்திற்கு புது இரயில் சேவையை நாளை தொடக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி...!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து " வந்தே பாரத் " எனப் பெயரிடப்பட்ட புதிய அதிவேக இரயில் சென்னை- கோவை மார்கமாக இயக்கப்படும் என இரயில்வே துறை தகவல் அளித்திருக்கிறது. இது  "வந்தே பாரத் " இரயிலின் 12 - வது சேவையாகும். இந்த இரயில் தினசரி காலை 6 முதல் இயக்கப்படும் எனவும் தகவல்கள்  கூறுகின்றன. இந்நிலையில் இந்த இரயில்காண முன்பதிவும் தற்போது தொடங்கியிருக்கிறது. உணவுடன் கூடிய குளிர்சாதன சேர் கார் வசதி, எக்சிகியூடிவ் சேர் கார் என பல்வேறு சிறப்பம்சங்களைக்கொண்டுள்ள இந்த இரயிலின் முதல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்ட்ரல் இயல் நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். அவரின் வருகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சர்வதேச விமான நிலையத்தில் புதிய கட்டடம் ஒன்றைத் திறந்துவைத்துவிட்டு சென்ட்ரல்  வர இருக்கிறார். இதனையடுத்து, சென்ட்ரல் இரயில் நிலையத்தில் 5 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் இரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் தீவிர  சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தகவல் வெளியாகிறது. மாநிலம் முழுவதும் 22,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.