தமிழ்நாடு

வன்னியர் இடஒதுக்கீட்டை பெற்று கொடுத்தது இ.பி.எஸ். தான்- ராமதாஸ்...

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை மறுக்க முடியாது என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை மறுக்க முடியாது என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் விழுப்புரம் மாவட்ட பாமக வேட்பாளர்களை ஆதரித்து கூட்டேரிப்பட்டுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். அப்போது பாமக நிறுவன ராமதாஸ் 45 ஆண்டுகளாக தொடர்ந்து போராடியதற்கு கிடைத்த வெற்றியாக தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும் அதனை முழுமூச்சாக உறுதுணையாக இருந்து பெற்றுக் கொடுத்தது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் என்பதை மறுப்பதற்கும் மறைப்பதற்கும் இல்லை என்றும் கூறினார்.