தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம், ராமாகுண்டம் மாநகரில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதை அங்கு நின்றிருந்தவர்கள் கண்டு பதறிதுடித்து கூச்சலிட்டனர். பலரின் கண் முன்னே இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்தவர் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.