தமிழ்நாடு

காதல் விவகாரம் தான் காரணமா? மாணவர்கள் தாக்கிகொள்ளும் வீடியோ வைரல்!

Tamil Selvi Selvakumar

தென்காசியில் கல்லூரி மாணவர்கள் தாக்கிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திடீரென நடந்த தாக்குதல் சம்பவம்:

தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை சுரண்டை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்றிருந்த அக்கல்லூரி மாணவன் ஒருவரை வெளியில் இருந்து வந்த மூன்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென சரமாரியாக  தாக்கினர். இதை கண்ட அந்த மாணவரின் நண்பர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

காதல் விவகாரம் தான் காரணமா?:

அப்போது, இச்சம்பவத்தை அங்கு நின்றிருந்த மாணவர்  ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காதல் விவகாரத்தால் இந்த மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அதாவது, கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவரும், அவரை தாக்கிய இளைஞர்களில் ஒருவரும் ஒரே பெண்ணை காதலித்ததாகவும், அது தொடர்பாக ஏற்பட்ட மோதலிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.