Ajith Kumar Racing start the cm vijay  
தமிழ்நாடு

“16-ம் நம்பர் காரில் சீறிப்பாயும் அஜித்” - கொடியசைத்து ரேஸை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்” - உற்சாகத்தில் ரசிகர்கள்!

குழந்தைபோல உற்சாகமடைந்த ஓடி சென்று அஜித்தை ஆரத்தழுவிய விஜய்...

Mahalakshmi Somasundaram

தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறை பயணமாக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் (10-ந் தேதி) இரவு 10 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் புறப்பட்ட அவர், துபாய் வழியாக லண்டன் சென்றடைந்தார். நேற்று காலை 7 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்த விஜய்க்கு, இந்திய நேரப்படி காலை 11.30 மணியளவில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரிட்டன் தமிழ் சங்க தலைவர் ஜேக்கப் ரவிபாலன், தவெக நிர்வாகி துரை கண்ணன் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் பூங்கொத்துகள் வழங்கி அவரை வரவேற்றனர்.

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே விஜய்யின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில், விஜய்யின் பிரிட்டன் பயணத்தின் முக்கிய நிகழ்வாக நடிகர் அஜித்குமாரின் அவரது ரேஸிங் அணியுடன் பங்கேற்ற புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலில் நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. போட்டி இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கும் என் அறிவித்திருந்த நிலையில் முன்னதாகவே தொடங்கப்பட்டது.

16-ம் நம்பர் காரில் களமிறங்கிய அஜித்குமார்

இதனைத் தொடர்ந்து, மாலை சில்வர்ஸ்டோன் சர்க்கியூட்டிற்கு நேரில் சென்ற விஜய் நடிகர் அஜித்குமாரை சந்தித்தார். அப்போது குழந்தைபோல உற்சாகமடைந்த ஓடி சென்று அஜித்தை ஆரத்தழுவிய விஜய், கார் பந்தயத்தில் வெற்றி பெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து இருவரும் ஒன்றாக இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தனர். இருவரும் சந்தித்துக்கொண்ட காட்சிகளை அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.சினிமாவில் ரசிகர்களால் போட்டியாளர்களாக பார்க்கப்படும் விஜய் மற்றும் அஜித், லண்டனில் ஒரே இடத்தில் சந்தித்து நட்புடன் உரையாடிய தருணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

தொடர்ந்து போட்டி நடக்கும் இடத்திற்கு சென்ற முதல்வர் காரில் இருந்த தனது நண்பர் அஜித்தை சந்தித்த,அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், கைகுலுக்கி கார் பந்தயத்தில் வெற்றி பெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். 16-ம் நம்பர் காரில் களமிறங்கிய அஜித்குமார் பந்தயத்தில் பங்கேற்க, விஜய் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்த காட்சிகள் அங்கிருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.