தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கூறியதற்கு நடிகரும், கார் ரேசருமான அஜித் குமார் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டினை உலகளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரமாக மாற்றும் பொருட்டு சர்வதேச அளவிலான மோட்டர் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்றும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பை முதல்வர் விஜய் அறிவித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த அறிவிப்பிற்கு நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார் நன்றியினை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு இளைஞர்களை விளையாட்டு துறையின் பக்கம் ஈர்த்து அவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டிற்குரியவை என்று நடிகர் அஜித் குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மோட்டர் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக விண்வெளி வீரர், நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ் பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி "One small stop by the Tamil Nadu Govemment, one giam leap for indian motorsports" என்று குறிப்பிட்டிருந்தார். மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய்-யின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.