vijay with couple  
தமிழ்நாடு

விஜய்க்காக காத்திருந்த மணமக்கள்.. துளியும் யோசிக்காமல் விஜய் செய்த சம்பவம்.. துள்ளித் துள்ளிக் குதித்த மணப்பெண்!

தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் சாதாரண மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர் செய்த இந்த செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது...

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இன்று செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தனது சாலைப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, தற்போது திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் பிரம்மாண்ட சாலைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை வழியாக அவர் தனது பிரச்சார வாகனத்தில் சென்றபோது, வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த பயணத்தின் போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. திருவள்ளூர் செல்லும் வழியில் பாலைவேடு என்ற பகுதியில், புதுமண தம்பதி ஒருவர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து ஆசி பெறுவதற்காக சாலையோரம் காத்திருந்தனர். இதைக் கவனித்த விஜய், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி அந்த புதுமண தம்பதியை தனது வாகனத்திலேயே ஏற்றி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். "நல்லா இருங்க" என்று அவர்களை மனதார வாழ்த்தி ஆசி வழங்கிய இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் சாதாரண மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர் செய்த இந்த செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தற்போது விஜய் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களுக்காக அவர் இன்று பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். செல்லும் வழியில் உள்ள ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் (டோல்கேட்) கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். கூட்டமாகத் தொண்டர்கள் கூடியிருக்கும் இடங்களில் எல்லாம் தனது வாகனத்தில் இருந்து வெளியே வந்து கை அசைத்து அவர்களின் அன்பைப் பெற்று வருகிறார்.விஜய்யின் இந்த சாலைப்பயணத் திட்டத்தின்படி, தாம்பரம் மற்றும் பூந்தமல்லி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே அவர் சுங்கச்சாவடி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். நாளை மாலையோடு 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் நிறைவடைய உள்ளது.

இதனால் கடைசி கட்டமாக வாக்காளர்களைக் கவரும் வகையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், விஜய்யின் இந்த அதிரடி சாலைப்பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு இந்த பிரச்சாரக் கூட்டங்கள் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் வழியாக அவர் பயணம் செய்யும்போது பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே அந்தந்த தொகுதி வேட்பாளர்களை அருகில் நிற்க வைத்து, அவர்களுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் விஜய் கோரிக்கை விடுத்து வருகிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.