tvk vijay 
தமிழ்நாடு

‘விஜய் தான் முதல்வர் வேட்பாளர்!!’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

செயற்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் தொடர் மக்கள் சந்திப்புகள்,கட்சி மேம்பாட்டு பணிகள்,தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை ...

Saleth stephi graph

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது....

மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர் உடன் ஒரு நிர்வாகி என 240 நபர்களும் மாநில நிர்வாகிகள்,சார்பு அணி ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 300 பேர் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்

சட்டமன்ற தேர்தல் கூட்டணி, உறுப்பினர் சேர்க்கை, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்கள் எதிர்ப்பு உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற பட உள்ளது

மேலும் செயற்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் தொடர் மக்கள் சந்திப்புகள்,கட்சி மேம்பாட்டு பணிகள்,தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை  நடைபெற்றது 

இந்த ஆண்டுக்கான முதல் மாநில செயற்குழு இன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் விஜய் தான் தவெக -வின் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.