Vijay-Tamilisai 
தமிழ்நாடு

“விஜய் பாஜக -வில் சேர்ந்தால் மட்டும்தான் நல்லது… இல்லாவிட்டால்..” -தமிழிசை சௌந்தர்ராஜன் ஓபன் டாக்!!

நாங்கள் வேண்டி வேண்டி உங்களை வாழ்த்து சொல்ல கேட்கவில்லை, எங்களின் உரிமையை ...

மாலை முரசு செய்தி குழு

2026 தேர்தல் களத்தை தனித்துவமாகியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு. தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த தேர்தலை தனித்துவமாக்கியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

இந்த சூழலில்தான் விஜய், திமுக -வை கடுமையாக விமர்சித்து வருகிறர். மேலும், கிடைக்கும் இடங்களில் எல்லாம் திமுக -வை கடுமையாக விமர்சித்து வருகிறார் விஜய் . மேலும் சென்னை வானகரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் ஆற்றிய உரை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் சில காலமாகவே தமிழக பாஜக விற்கு நூல் விடுவதாக சொல்லப்பட்டது. ஆனலும், விஜய் பாஜக -வை கொள்கை எதிரி என சொல்லிவிட்ட காரணத்தால், அவர்கள் ஆசை நிராசையாகவே உள்ளது. இந்த சூழலில்தான், சென்னை வேளாச்சேரியில் கிழக்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பாக, முப்பெரும் விழாவான கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு 2026 மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி ஆகியவை கொண்டாடப் பட்டது, இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், இளைஞரணி தலைவர் SG சூர்யா, மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் ஜான்சன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

முப்பெரும் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது, தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் அன்னதானம் பரிமாறினர். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்;

தமிழக மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, பாஜக உண்மையான மத சார்பின்மை கட்சி. ஆக அனைவருக்கும் நாங்கள் வாழ்த்து சொல்கின்றோம். மரியாதைக்குரிய முதலமைச்சர் இந்து மத விழாக்கள் எதற்குமே வாழ்த்து சொன்னதில்லை, ஆனால் கிருஸ்துமஸ் விழாவை ஒற்றுமையாக நாம் கொண்டாடி வருகிறோம். நாங்கள் செய்திக்காக இதனை செய்யவில்லை, சிறுபான்மையினர் மக்களுக்காக இதனை செய்து கொண்டிருக்கிறோம் என்பதனை நான் கூறுகிறேன். நாங்கள் அகில பாரதத்திற்கு உட்பட்டவர்கள். 2026 இல் இரட்டை இலையோடு தாமரை மலரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு மாநிலத்தில் இருந்து பாஜக தலைவராக ஒருவர் வரமுடியும் என்றால் அது பாஜக தான், அதே போல ஒரு மண்டலத்தில் ஒருவர் வளர முடியும் என்றால் அதுவும் பாஜக தான். நாங்கள் இந்த மேடையில் கிருத்தவர்களுக்கு வாழ்த்து சொல்வதை தான் செய்வோம், ஆனால் முதல்வர் இதே போல நிகழ்ச்சியில் பாஜக அனைவரையும் பிரிகின்றது என கூறி வருகிறார். சிறுபான்மையினர்களுக்காக எத்தனை திட்டங்களை கொண்டு வந்துள்ளீர்கள்? அவர்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறீர்கள். நம்மையும் சிறுபான்மையினரையும் அந்த அப்பா பிரிக்க பிரிக்க, இந்த பாதர் நம்முடன் வருவார். இந்து முஸ்லீம்களை பிரிக்க வேண்டும். 2026 க்கு மேல் உங்களுக்கு வேலை இல்லை, வேல் பார்த்துக் கொள்ளும்.

திருப்பரங்குன்றத்தில் இன்னொரு மதத்திற்கு பாதுகாப்பு கொடுத்து கொடி ஏற்ற வைத்துள்ளார்கள். அங்கே உள்ள மக்கள் எங்களை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். முதல்வர் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். எல்லாருடைய ஓட்டையும் தான் முதல்வர் வாங்கியிருக்கிறார். முதல்வராக இருந்துக் கொண்டு, வாக்களித்த இந்துக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்.

நாங்கள் வேண்டி வேண்டி உங்களை வாழ்த்து சொல்ல கேட்கவில்லை, எங்களின் உரிமையை நாங்கள் கேட்கிறோம். உயர்நீதிமன்றம் சொல்லி விட்டது, எத்தனை நாட்கள் கடந்தாலும், கார்த்திகையே சென்றாலும், அங்கே நாங்கள் தீபம் ஏற்றியே தீருவோம். நாமெல்லாம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம் என்று முதல்வர் சொல்கிறார், நீங்கள் ஏன் வாழ்த்து சொல்வதில்லை? கேக் வெட்டும் முதல்வர் ஏன் குடமுழக்கு நிகழ்வுகளில் கலந்துகொள்வது இல்லை?

ஏசு அந்நியர்களை நீக்க கற்றுக்கொள்ளுங்கள் என சொன்னார். இந்த பக்கம் ஸ்டாலின், அந்த பக்கம் உதயநிதி. தமிழருக்கு என ஒரு குணம் இருக்கிறது என்று உதயநிதி கூறுகிறார். தமிழகம் உங்களுக்கு வேண்டுமானால் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம், நாங்கள் தமிழ் மண்ணில் உயிரோடு தமிழை கொண்டுள்ளோம். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதமர் மோடியை போல தமிழை உலக அரங்கில் ஒலித்த தலைவர் எவருமே இல்லை. முதல்வர் அவர்களே இந்த முறை நீங்கள் கிறிஸ்துமஸ் விழாவுக்கு சென்றது போல, நாங்கள் இந்து மத விழாவுக்கு அழைக்கின்றோம், நீங்கள் கலந்துக்கொள்ளுங்கள். திமுக தலைவராக அல்ல, முதல்வராக கலந்துகொள்ளுங்கள்.

உலக அரங்கில் தீபாவளி கொண்டாடப்படும் என யுனஸ்கோ அறிவித்துள்ளது. அடுத்த முறை அவர் முதல்வராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. திமுக தலைவராக கூட என்ன வேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும். பாஜக எப்போதும் மத சார்பின்மை  இல்லாத கட்சி என்பதை தவிர, மத சார்புள்ள கட்சி என்று எப்படி சொல்வீர்கள் முதல்வர் அவர்களே? 

உதயநிதி பைபிள் கொள்கையில், திமுக கொள்கையும் ஒன்றாக உள்ளது என்று கூறுகிறார், இதனை ஏசு பிரானே மன்னிக்க மாட்டார். 7 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ள உங்கள் கட்சியின் கொள்கை, பைபிள் கொள்கைக்கு நிகராக உள்ளதா? 

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மிகுந்த நாடாக இருந்த இந்த நாட்டை உலக தரத்தில் மாற்றி வருகிறார் பிரதமர். தம்பி விஜய் கிருஸ்துமஸ் கொண்டாடுவதை நான் பாராட்டுகிறேன், அதே போல தீபாவளியை கொண்டாடினால் சரி. விஜய், ஸ்டாலின் ஆகியோர் கிறிஸ்துமஸ் விழா நடத்தி அவர் அவர் முதல்வர் ஆக வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் பாஜக தான் கிருஸ்துமஸ் விழா நடத்தி அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்து தெரிவிக்கின்றது என்று அவர் பேசினார். தொடர்ந்து பேசிய  தமிழிசை சௌந்தரராஜன்,

பாஜக சார்பில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  கிறிஸ்துமஸ் விழாவின்போது மட்டுமல்ல அனைத்து நேரங்களிலும் சிறுபான்மையினர் மக்களுக்கு தோழர்களாக இருக்கிறோம். பாதுகாவலர்களாக இருக்கிறோம். 

ஆனால் தமிழக முதல்வர், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதலமைச்சர் தனது ஸ்டைலை மாற்றிக்கொள்ள வேண்டும். பாஜகவும் சிறுபாண்மை மக்களும் சேர்ந்தால் தங்களுக்கு பிரச்சனை என்பதால் பிரித்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரித்து வைத்தால்தான் ஓட்டு வாங்க முடியும் என்ற நோக்கத்தில் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார் முதலமைச்சர். இந்து மத உணர்வோடு எங்கள் உரிமைகளை கேட்டால் எங்களை வெறியர்கள் என்று  பட்டத்தை சுமத்தி விடுகிறார்கள். அதற்கு திருப்பரங்குன்றம் ஒரு சாட்சி. 

ஒரு பக்கம் முதலமைச்சர் இந்துக்களை திட்டுகிறார். இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் பைபிள் கொள்கையும் திமுக கொள்கையும் ஒன்று என்கிறார். வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வோம் என்று சொல்கிறார். இந்துக்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துகிறார்கள். 

இஸ்லாமிய திருவிழாவில் கொடி ஏற்றியதில் எந்த தவறும் இல்லை ஆனால் இவர்களுக்கு கொடுத்த அதே காவல்துறை பாதுகாப்போடு இந்துக்களையும் தீபம் ஏற்ற வைத்திருக்க வேண்டுமா? இல்லையா? இஸ்லாமியர்கள் கொடியேற்றலாம், இந்துக்கள் தீபம் ஏற்றக்கூடாது என்றால் எந்த அளவிற்கு பிரிவினையை ஏற்படுத்துகிறீர்கள்.  முதலமைச்சர் சிறுபான்மையினரை தாஜா செய்து கொண்டிருக்கிறார் விஜய் போன்றவர்கள் வந்துவிட்டதால் சிறுபான்மையினர் வாக்குகள் பிரிந்து விடும் என்ற கவலையில் இருப்பதால் நாங்கள் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் சிறுபான்மையினர் இதனை நம்பக்கூடாது. ஓட்டு வங்கிக்காக மட்டுமே உங்களிடம் இவர்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

பிரதமர் கிறிஸ்துமஸுக்கு வாழ்த்து சொல்கிறார். ஆனால் முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை. முதல்வர் இந்த பிரித்தாலும் தன்மையை விட வேண்டும். எங்களை பிரித்து ஓட்டு வாங்க வேண்டும் என்ற உங்களின் எண்ணம் பலிக்காது. 

அதிமுக பாஜக கூட்டணி செல்ப் எடுக்காத கார் என்று மாணிக்கம் தாகூர் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு.... செல்ஃப் எடுக்காதவர்கள் எல்லாம் செல்ஃப் எடுப்பதை பற்றி பேசுகிறார்கள். நாங்களாவது எங்களுடைய சொந்த காரை வைத்திருக்கிறோம். உங்களிடம் கார் மட்டும் தன் உள்ளது என்ஜினை இல்லை. ஆனால் எங்களிடம் என்ஜீனும் உள்ளது எனர்ஜியும் உள்ளது. நீங்கள் உங்கள்  எஞ்சின் யை ஸ்டாலின் கையிலும் உதயநிதி கையிலும் கொடுத்துள்ளீர்கள்.  பாஜக அதிமுகவுக்கு முதலாளி என்று சிதம்பரம் சொல்கிறார். அப்படி என்றால் நான் கேட்கிறேன் காங்கிரசுக்கு முதலாளி திமுகவா? 

பழைய அடிமைகள் புதிய அடிமைகள் என்று உதயநிதி பேசுகிறார், நீங்கள் யாருக்கு அடிமை என்று எங்களுக்கு தெரியும். உங்களால் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டி போட முடியுமா? மற்ற கட்சிகளை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு தான் அடிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. போராட்டம் செய்ய முடியவில்லை, கொடியேற்ற முடியவில்லை என்று விசிக புலம்பி கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் இன்றைக்கு பெட்டிப் பாம்பாய் அடங்கி கிடக்கிறார்கள்  திமுக கூட்டணி ஆட்சிக்கு தயாரா? துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு கொடுத்துவிடுவார்களா? 

கூட்டணி ஆட்சி தொடர்பான கேள்விக்கு... இபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்று அமித்ஷா சொல்லிவிட்டார். நாங்கள் எந்த குழப்பமும் இல்லாமல் இருக்கிறோம். 

திமுகவுக்கு எதிராக இருக்கும் அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்று இபிஎஸ் பேசியது தொடர்பான கேள்விக்கு..... பாஜக குறித்து விஜய் விமர்சனம் செய்வதால் தான் நாங்கள் விமர்சனம் செய்கிறோம். விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தால் நல்லது நடக்கும், இல்லையென்றால் மீண்டும் சினிமாவுக்கு செல்ல வேண்டி இருக்கும் என்று ஏற்கனவே நான் பேசி இருக்கிறேன். திமுகவை எதிர்க்க வேண்டியது தார்மீக கடமை. திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தார்மீக கடமை. அதைத்தான் விஜயும் சொல்கிறார், அதில் எனக்கு மகிழ்ச்சி. திமுகவை தீய சக்தி என்று விஜய் சொல்வதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அந்த தீய சக்தியை வீட்டுக்கு அனுப்பும் சக்தி நமக்கு மட்டும்தான் இருக்கிறதா? கூட்டணியில் சேர வேண்டுமா? என்று விஜய் சிந்திக்க வேண்டும் 

விஜய்யை நான் கூட்டணிக்கு அழைக்கவில்லை.. விஜய் இல்லாமலேயே நாங்கள் வெற்றி பெறுவோம் நான் விஜய்க்கு அறிவுரை சொல்கிறேன். ஆனால் விஜயின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் இன்னொரு பலத்துடன் சேரவேண்டும்.

விஜய்யால் தனியாக சாதிக்க முடியாது என்று விஜய்க்கு எச்சரிக்கை கொடுக்கிறேன் விஜய் அரசியலில் பிழைக்க வேண்டும் என்றால் உழைக்கும் எங்களோடு இருக்க வேண்டும் தனியாக நின்று காணாமல் போய்விடக்கூடாது. நாளை பியூஸ் கோயில் வருகிறார். நாளை எங்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அவர் வந்த பிறகுதான் என்ன விஷயங்கள் பேசுவார் என்பது தெரியும். 

நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கனிமொழியிடம் கேட்கிறேன். மாநில உரிமையை திமுக விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் மத்திய அரசோடு இணக்கமாக இருந்து மாநிலத்திற்கு வேண்டியதை கேட்டு பெறுகிறார்கள். நாங்கள் மாநில உரிமையை பறிக்கவில்லை. திரும்பத் திரும்ப இதே கதையை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பழைய தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி விட்டார்களா என்று பார்த்துவிட்டு கனிமொழி புதிய தேர்தல் வாக்குறுதிகளை போடட்டும். 

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டதில் அனைத்து கட்சி போராட்டம் தொடர்பான கேள்விக்கு...  இந்த போராட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன். கவனத்தை திசை திருப்ப போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டம் பலன் தராது. காங்கிரஸ் மகாத்மா காந்தியை தினம் தினம் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  முதலமைச்சரும் உதயநிதி ஸ்டாலினும் out of control இல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்று அவர் பேசினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்