தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தேர்தலின் தனித்துவத்தை உறுதி செய்தவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான். இதுவரை அதிமுக - திமுக என்ற இரண்டு பிராந்திய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலை சற்று மாறியுள்ளது.
அரசியல் களத்தில் தனது இரண்டாவது பயணத்தை நாகப்பட்டினத்தில் தொடங்கிய நடிகர் விஜய், அங்கே திரண்டிருந்த மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னால், ஆளும் அரசுக்கு எதிராகக் கடும் சீற்றத்துடன் பேசிய பேச்சு, தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திஇருந்தது.
இன்று நாமாக்கல் பகுதியில் தனது பரப்புரையை மேற்கொண்டார் விஜய், 5 மணி நேரம் தாமதமாக வந்த விஜய் “என்ன கண்ணுங்களா எல்லாம் எப்படி இருக்கீங்க!?? என் நெஞ்சில் குடியிருக்கும் என பேச்சை துவங்கினார், தொடர்ந்து பேசிய அவர், “நாமக்கல்லில் லாரி உபரி தயாரிக்கிற தொழிலில் இருந்து இன்னும் நெறைய பொருட்களும், அதிகளவு முட்டையும் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு நகரம். அதுக்குமட்டுமா நாமக்கல் பேமஸ் “தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என நமது நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் இந்த வரிகளை, நமக்கு தந்த நாமக்கல் கவிஞர் - திரு.ராமலிங்கம் பிள்ளை அவர்கள் பிறந்த மண் தான் இது.
தமிழ்நாட்டு மக்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமையை வழங்கியதும், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த, நமது திரு. சுப்பராயன் அவர்கள் தான். communal GO 1071 - என்ற இட ஒதுக்கீடு உரிமையை தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாங்கித் தந்தார் . அதுனாலதான் அவர் முதலமைச்சரா பதவியேற்ற பிறகு முதல் தமிழர் -னு அழைக்கப்பட்டார்.
அப்படிப்பட்ட நபருக்கு மணிமண்டபம் காட்டுவோம் வாக்குறுதி 456 - கொடுத்தது யாரு… ?சொன்னாங்களே செஞ்சாங்களா..? என அவர் பேச பேச அக்கூட்டம் ஆர்பரித்தது.
தொடர்ந்து பேசிய அவர், ‘வடிவேலு சார் படத்துல வர்ற காமெடி மாதிரிதான்.. வெறும் empty pocket -தான்’ என அவர் சொன்னதும் கூட்டம் முழுக்க சிரிப்பலையால் நிறைந்திருந்தது.
தொடர்ந்து பேசிய அவர், “வாக்குறுதி நம்பர் 68 நாட்டு சர்க்கரை வெல்லம் நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் என சொன்னார்கள்.. வாக்குறுதி நம்பர் 66 விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரைகளை சேகரித்து தேங்காய் எண்ணை உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக என சொன்னார்கள்.. வாக்குறுதி நம்பர் 152 போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும் என சொன்னார்கள்.. ஆனால் செய்தார்களா? - மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசுகையில், திமுக எம்.எல்.ஏ –வுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு என சொல்லும் போதே மக்கள் கூட்டம் ஆர்பரித்தது, “ இதுதான் ஊரறிஞ்ச உண்மையாச்சே, அத நான் திருச்சியிலையே பேசியிருக்கேன். ஆனா இதுல அதிகம் பாதிக்கப்பட்டது, நமது நாமக்கல் மாவட்டத்தோர் தான் அதிலும் குறிப்பாக, ஏழை விசைத்தறி பெண்களை குறிவைத்துதான் இந்த கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. இதில ஈடுபட்டவங்க யாரை இருந்தாலும் நமது ஆட்சி அமைந்ததும் கடுமையா தண்டிக்கப்படுவார்கள். இந்த கிட்னி திருட்டு எங்க இருந்து ஆரம்பிக்குதுனா ‘கந்து வட்டி’ கொடுமையில் இருந்துதான். ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாமல் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்காமல், அவர்களை கிட்னி விற்கும் நிலைக்கு தள்ளியுள்ளது இந்த அரசு.
இந்த சுற்று பயணத்தில் மக்கள் நம்மகிட்ட சொல்லுற ஒரே விஷயம், அடிப்படை சாலை வசதி, குடிநீர், மருத்துவம், பெண்கள் பாதுகாப்பு. மக்கள் கேட்பது எல்லாம் வெறும் அடிப்படை விஷயங்கள் தான். அவர்கள் பெரிதாக ஏதும் கேட்கவில்லை.
நீங்க நினைக்கலாம், இந்த விஜய் எங்க போனாலும் கேள்வியா கேக்குறாரேன்னு, அதுக்குத்தான் ஏற்கனவே விளக்கம் கொடுத்துட்டோம், “ மக்களுக்கு அடிப்படை வசதியில் எந்த சமரசமும் கிடையாது” ஆனால் அதையும் பலர் விமர்சித்தனர், இதைத்தான் எல்லாருமே சொல்லுகிறார்கள். இவர் என்ன புதுசா எதாவது சொல்லட்டும் னு சொல்றாங்க… அய்யா அரசியல் அறிவாளிகளே, மேதைகளே…மனிதன் நல்ல உணவை உண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து, எல்லா இடங்களுக்கும் எளிதில் பயணித்து நிம்மதியான வாழ்வை வாழ வேண்டும், இதுதானே இப்போதும் அடிப்படைத்தேவை. நாங்க ஒன்னும் திமுக மாறி பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பவர்கள் அல்ல. புதுசா சொல்லுங்க.. புதுசா சொல்லுங்கன்னா எனக்கு புரியலையே.. வேணும்னா “செய்வாய் கிரகத்துல ஐ.டி கம்பெனி கட்டப்படும், காத்துல கல்வி கட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும், வீட்டுக்குள் ஏரோபிளேன் ஒட்டப்படும், அப்டினு அடிச்சு விடுவோமா.. நம்ம சி.எம் அவர்கள் அடிச்சி விடுவாரே அந்த மாறி அடிச்சி விடுவோமா!?
நா ஏற்கனவே சொன்னதைத்தான் திரும்ப சொல்ற, இந்த பாசிச பாஜக அரசோடு நாங்க என்னைக்குமே ஒத்து போக மாட்டோம். இந்த திமுக மாதிரி கள்ளக்கூட்டணியில் இருக்க மாட்டோம், மூச்சுக்கு 300 தடவ அம்மா அம்மா -னு சொல்லிட்டு ஜெயலலிதா மேடம் சொன்ன எந்த விஷயத்தையும் கேக்காம ஒரு பொருந்தா கூட்டணியை அமைச்சிக்கிட்டு, கேட்டா நாட்டுக்கு நல்லதுன்னு சொல்றவங்கள போல இருக்க மாட்டோம்.
சீறி நா தெரியாம கேக்கற இந்த பாஜக என்ன பண்ணாங்க. நீட்ட ஒழிச்சிட்டாங்களா? கல்வி தொகையை விடுவிச்சிங்களா!? அப்றம் எதுக்கு இந்த சந்தர்ப்பவாத கூட்டணி? அப்டினு நா கேக்கல.. உண்மையான எம்.ஜி.ஆர் -ன் தொண்டர்களை கேக்குறாங்க. சரி அவங்க கூட்டு, பொரியல் னு எதையாவது கிண்டிக்கட்டும், நமக்கு எதுக்கு!?
ஆனா இந்த திமுக - பாஜக உடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கிறது என மறந்து விடாதீர்கள்.. வரபோற தேர்தல்ல திமுக -வுக்கு நீங்க ஒட்டு போடீங்கன்னா அது பாஜக -வுக்கு போட்ட மாதிரி, வேணாம் மக்களே ஜாக்கிரதை, யோசிங்க..அதுனாலதான் மறுபடியும் சொல்ற, 2026 -ல ரெண்டு பேருக்கு இடையிலதான் போட்டியே..ஒன்னு மாபெரும் மக்கள் சக்தி கொண்ட Tvk இன்னொன்னு கொள்கை என்கிற பேருல மக்கள் சொத்த கொள்ளையடிச்சிகிட்டு இருக்க DMK - இதுரெண்டுக்கும் தான் போட்டியே.. என அவர் பேச பேச மக்கள் ஆர்ப்பரித்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.