Admin
தமிழ்நாடு

விஜய்யின் "ஒற்றை வார்த்தை".. அதிர்ந்த ஒட்டுமொத்த அரங்கம்.. தாமரையின் அனைத்து வியூகமும் க்ளோஸ்!

மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி

Mahalakshmi Somasundaram

இன்று தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வமாக கட்சியின் முதல்வர் வேட்பாளராக தாவெக தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே கூட்டத்தில் பேசிய விஜய் “மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர் காய நினைக்கிறது பாஜக, அவர்களின் இந்த செயல் ஒரு போதும் தமிழகத்தில் வெற்றி பெறாது. பாஜகவுடன் இணைந்து போக இது அதிமுகவோ அல்லது திமுகவோ இல்லை இது தமிழக வெற்றிக் கழகம்” என கூறியுள்ளார்.

மேலும் “கொள்கை எதிரிகள் மற்றும் பிளவு வாத சக்திகள்” என்று திமுகவையும், பாஜகவையும் குறிப்பிட்ட விஜய், இந்த கட்சிகளுடன் மறைமுகமாகவோ இல்லை நேரடியாகவோ எந்த கூட்டணியும் தமிழக வெற்றிக் கழகம் என்று வைக்காது. இது உறுதியான தீர்மானம் இல்லை இறுதியான தீர்மானம் என்று கூறியுள்ளார். அப்படி கூட்டணி வைத்தாலும் அந்த கூட்டணி தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் பாஜக மற்றும் திமுகவிற்கு எதிராகவே அமையும் என்று கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.