தமிழ்நாடு

“பாட்டிலுக்கு பத்து ரூபாய்” - மந்திரியை உச்சி மேல் தூக்கி வைத்து மெச்சியவர் சிஎம்.. செந்தில் பாலாஜியை விளாசிய விஜய்!

மணல் கொள்ளை தான் கரூரின் தீராத தலைவலி சட்டவிரோத கல்குவாரிகள் கனிம வளங்களை..

Mahalakshmi Somasundaram

தமிழகத்தின் 2026 ஆம் ஆண்டு தேர்தல்  நெருங்கிக் கொண்டிருக்கும்   நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வாக்குகளை சேகரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று மூன்றாவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் மதியம் நாமக்கல்லில் தனது பிரச்சாரத்தை முடித்து விட்டு கரூரில் பிரச்சாரம் செய்ய வந்தடைந்துள்ளார். 

காவல் துறைக்கு நன்றி தெரிவித்து பேச தொடங்கிய விஜய் “கரூர் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள ஊர். கரூரை பற்றி பெருமையாக பேச நிறைய உள்ளது. ஆனா இப்போ கரூர் சொன்னாலே ஒரு பெயரை தான் எல்லாரும் சொல்றாங்க.. பேரிச்சை வளர்க்க சிறப்பு திட்டம் 81.. பேரிச்சை விதையாவது கண்ணில் கட்டினார்களா? கரூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி 448 இப்போதுதான் அதற்கான கோரிக்கையே அமைச்சர் வைத்திருக்கிறார்.. மணல் கொள்ளை தான் கரூரின் தீராத தலைவலி சட்டவிரோத கல்குவாரிகள் கனிம வளங்களை அழிக்கிறார்கள்.. 11 மணிக்கு பதவி ஏற்றல் 11.30 மணிக்கு மணல் கொள்ளை அடிக்கலாம் என சொன்னவர்கள் தான் உங்க ஆளுங்க சிஎம் சார்..

கரூர் மாவட்டத்தில் மந்திரி.. மந்திரி.. என ஒருத்தர் இருந்தார் தற்போது அவர் மந்திரியாக இல்லை ‘பாட்டிலுக்கு  பத்து ரூபாய்.. பாட்டிலுக்கு  பத்து ரூபாய்..’ கரூரில் நடத்திய முப்பெரும் விழாவில் மாஜி மந்திரியை உச்சி மேல தூக்கி வைத்து மெச்சினார் சிஎம்.. இப்போது இந்த மந்திரி ஊழல் செய்யும் பணத்தை திமுக குடுபத்திற்கு டெலிவரி செய்யும் ஏடிஎம் இயந்திரமாக செயல்படுகிறார் என மக்கள் பேசுகின்றனர்.. போலீஸ் பாதுகாப்பு கரூரில் இல்லை.. போலீசாரின் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. ஆறு மாதங்களில் ஆட்சி மாறும் காட்சி மாறும்.. அதிகாரம் கை மாறும்.. உண்மையான மக்களாட்சி மனசாட்சியுள்ள மக்களாட்சி அமையும்.. எல்லோருக்கும் அப்போது சுதந்திரம் பாதுகாப்பும் கிடைக்கும். வெற்றி நிச்சயம்” என பேசி தனது உரையை முடித்தார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.