தமிழ்நாடு

“வெளிநாட்டு முதலீடா..? வெளிநாட்டில் முதலீடா..?” - முதலமைச்சரை அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய விஜய்..பிரச்சார உரையின் முழு விவரம்!

மீனவர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ.. அதே போல ஈழத்தமிழர்களின் கனவுகளும் முக்கியம்...

Mahalakshmi Somasundaram

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் கடந்த வாரம் முதல் அவரது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கி முதற்கட்டமாக திருச்சி மற்றும் அரியலூரில் பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில், இன்று இரண்டாவது கட்டமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் முதற்கட்டமாக நாகப்பட்டினம் புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் விஜய் தனது பிரச்சாரத்தை செய்யவுள்ளார். எனவே இதனை தொடர்ந்து அப்பகுதியில் விஜய்யை பார்க்க திரளான மக்கள் கூடியுள்ளனர்.

“எல்லோருக்கும் வணக்கம் சாப்பிட்டீங்களா.. கடல் தாய் மடியில் இருக்கும். எனது மனதுக்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணில் பேசிக்கொண்டிருக்கிறேன். உழைக்கும் மக்கள் இருக்கும், மத வேறுபாடு அற்ற அனைவருக்கும் பிடித்த நாகப்பட்டினம் மக்களுக்கு மீண்டும் வணக்கம்.. தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் ஆனால் அதற்கான மேற்படுத்தப்பட்ட வசதிகள் இங்கு இல்லை, அதிக குடிசைகள் இருக்கும் மண் நாகப்பட்டினம்.

இந்த முன்னேற்றத்துக்கு எல்லாம் எங்கள் ஆட்சி தான் சாட்சி என அடுக்கு மொழிகளில் பேசி பேசி நமது காதுகளில் இருந்து ரத்தம் வந்தது தான் மிச்சம், இவர்களின் ஆட்சி பத்தாத? இலங்கை கடற்படைகளால் நமது மீனவர்கள் தங்கப்படுவதை பேசினேன் மீனவர்களுக்காக குரல் கொடுப்பது தப்பா? நான் என்ன இன்று நேற்றா மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறேன்? 2011லே மீனவர்களுக்காக பேச தொடங்கிவிட்டேன். இந்த விஜய் களத்திற்கு வருவது புதியது இல்லை எப்போவோ வந்தாச்சு கண்ணா. இதெல்லம் புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.

மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் இதே சமயத்தில் நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, தாய் பாசம் காட்டிய, தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்காகவும் நிற்பது முக்கியம். மீனவர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ.. அதே போல ஈழத்தமிழர்களின் கனவுகளும் முக்கியம். கடிதம் எழுது விட்டு அமைதியாக இருக்க நாம் திமுக இல்லை, இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்கள் என பிரித்து பேச நாம் பாசிச பாஜக அரசு இல்லை.

நாகப்பட்டினம் மண் வளத்தை பாதிக்கும் ஈரால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். கடலோர கிராமங்களை பாதுகாக்க வேண்டும். இதை விட அரசாங்கத்திற்கு முக்கிய வேலை சொந்தக் குடும்பத்தின் வளர்ச்சிதான். குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு காவிரி தண்ணீர் கொண்டு வரலாம், மீன் சம்பந்தமான தொழிற்சாலைகளை அமைக்கலாம், வேலைவாய்ப்புகள் கொண்டு வரலாம். வெளிநாட்டிற்கு சென்று வரும்போது கோடிகளில் முதலீடுகள் என்கிறார்கள். சிஎம் சார் மனதை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா? இல்லை வெளிநாட்டில் முதலீடா? இங்கு இருக்கும் சுற்றுதலைங்களை மேம்படுத்தலாம்.

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவர் இல்லை, பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்தார்களா..? நெல் பாதுகாக்கும் குடோன்களை கட்டித்தரலாம் எதையும் செய்யாமலேயே, செய்தோம் என பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். அரசியலில் சிலருக்கு ஓய்வு அளிக்க வேண்டும். என்பதால் தான் இந்த ஓய்வு நாட்களில் பிரச்சாரம். எத்தனை கட்டுப்பாடுகள்?

அங்கு பேசக்கூடாது, இங்கு பேசக்கூடாது அதை பேசக்கூடாது இதை பேசக்கூடாது.. என்றால் எதை தான் பேச முடியும்.

பேருந்திற்குள் தான் இருக்க வேண்டும் வெளியில் வரக்கூடாது.. கையை அசைக்காதே.. மக்களை பார்த்து சிரிக்காதே.. நேரடியாக கேட்கிறேன், சிஎம் சார் மிரட்டி பார்க்கிறீர்களா? குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால் சொந்தமாக உழைக்க எனக்கு எவ்வளவு இருக்கும்? நாங்கள் என்ன பெரியதாக கேட்கிறோம். மக்கள் சுலபமாக நின்று பார்க்கும் இடம் அவ்வளவு தான். அராஜக அரசியல் வேண்டாம்” என தனது பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.