-mkstalin - vijay- edapadi  
தமிழ்நாடு

"ரேஸில் எடப்பாடியை முந்தும் விஜய்" - மாறும் கருத்து கணிப்புகள்..! அச்சத்தில் பிரதான கட்சிகள்..!

திமுக -அதிமுக இரண்டுமே வேண்டாம் என நினைக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ...

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தேர்தலின் தனித்துவத்தை உறுதி செய்தவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான். இதுவரை அதிமுக - திமுக என்ற இரண்டு பிராந்திய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலை சற்று மாறியுள்ளது.

அரசியல் களத்தில் தனது இரண்டாவது பயணத்தை நாகப்பட்டினத்தில் தொடங்கிய நடிகர் விஜய், அங்கே திரண்டிருந்த மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னால், ஆளும் அரசுக்கு எதிராகக் கடும் சீற்றத்துடன் பேசிய பேச்சு, தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது அரசியல் பயணத்திற்கு அரசு தரப்பில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து வெளிப்படையாகப் பேசிய விஜய், முதலமைச்சரை நேரடியாகக் குறிப்பிட்டு, "மிரட்டிப் பார்க்கிறீங்களா?" என்று கேள்வி எழுப்பியது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த வாரம் அவர் பேசிய பேச்சில் ஒரு முதிர்ச்சியான பேச்சை வெளிப்படுத்தினார். ஏற்கனவே மதுரை மாநாட்டில் ‘ஸ்டாலின் அங்கிள்’ என்றெல்லாம் பேசியிருந்தார். ஆனால் கடந்த சனிக்கிழமை பரப்புரையில் அவர் பக்குவத்துடன் கையாண்டதாகவே தெரிகிறது. மேலும், கடந்த சனிக்கிழமை பரப்புரையில் மக்கள் பிரச்சனைகளை நிறைய இடங்களில் பேசியிருந்தார். அவருக்கு எழும் கூட்டம் தன்னெழுச்சியாக வரும் கூட்டம். அவருக்காக மட்டுமே அத்தனை பேர் திரள்கின்றனர். இதை அவர் எவ்வளவு சிறப்பாக பயன்படுத்துகிறார் என்பதுதான் முக்கியம்.

பிரியன் சொல்லுது என்ன!

விஜய்யின் நாகப்பட்டினம் திருவாரூர் பரப்புரை குறித்து தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரியன் பேசுகையில், ‘விஜய் தனது படிப்பினைகளிலிருந்து பாடம் கற்று வளர்ந்து வருகிறார், அவருக்கு 20% வாக்குகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது, மேலும் சில கருத்து கணிப்புகளில் விஜய் எடப்பாடியை முத்தி வருகிறார், விஜய் சொல்வதுபோல, dmk vs tvk என்ற தோற்றமும் சில இடங்களில் உருவாகி வருகிறது.

அதற்குக் காரணம் இங்குள்ள பிரதான கட்சிகள் மீதான நம்பிக்கை போனதுதான், திமுக -அதிமுக இரண்டுமே வேண்டாம் என நினைக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

விஜய் மிகப்பெரும் நெருக்கடியை கொடுப்பார். சீமானின் வாக்குகள் விஜய் -யால் சரியும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் அதனாலதான் அவர் கிடைக்கும் மேடைகளில் எல்லாம், விஜயை மோசமாக பேசி வருகிறார்.

அதிமுக -விலிருந்து பலரும் விலகி வருகின்றனர், இப்படி உடையும் பல வாக்குகளையும், புதிதாக ஓட்டுப்போட உள்ள இளைஞர்கள் வாக்குகளையும் விஜய் கணிசமாக பெறக்கூடும். ஆனால் அதற்க்கு அவர் வருங்காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும்.” என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.