கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரி பட்டினத்தை சேர்ந்த விஷ்ணு பாரதி என்ற பொறியியல் பட்டதாரி “Hand Free Umbrella” என்ற குடையை உருவாக்கி அசத்தி உள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்துள்ளார்.
கல்லூரி படிக்கும் போது நண்பர்களுடன் வெளியே செல்லும் நேரங்களில் போக்குவரத்து காவலர்களும், களப்பணியாளர்களும், அன்றாடம் வெயிலில் நின்று வேலை செய்பவர்களை பார்த்து இவருக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது கையில் குடைபிடித்து கொண்டு இவர்களால் வேலை செய்ய முடியாது.
இவர்களை வெயிலில் இருந்து பாதுகாக்க என்ன செய்யலாம் என யோசனை செய்த விஷ்ணு பாரதி முதுகில் பை போல மாட்டிக் கொள்ளும் ஒரு வகை குடையை கண்டுபிடிக்க வென்றும் என்று நினைத்துள்ளார். அவர் நினைத்தது போலவே கல்லூரி வாழ்க்கையை முடித்த பிறகு அவர் நினைத்ததை கண்டுபிடித்து சாதனை செய்துள்ளார்.
இது குறித்து நமது செய்தியாளருக்கு விஷ்ணு பாரதி கொடுத்த பெட்டியில் “நான் இதுபோன்ற யோசனையை எனது கல்லூரி முடித்தவுடன் எனது அப்பாவிடம் கூறினேன் அதற்கு அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் உனக்கு பிடித்ததை செய் என்று சொன்னர். பிறகு காலத்திற்கு வந்து இந்த திட்டத்தை செய்யும் போது தான் எனக்கு தெரிந்தது நான் நினைத்தது போல இதை சுலபமாக செய்துவிட முடியாது என்று.
இந்த திட்டத்தை குறித்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு செய்யவே எனக்கு நிறைய காலம் எடுத்துக்கொண்டது. இதுவரை 70 முறை இது போன்ற மாதிரிகளை செய்துள்ளான். 70 முறையும் என் முயற்சி தோல்வியடைந்து. 71வது முறையாக இம்முறை சாத்தியமடைந்துள்ளது” என கூறி மகிழ்ச்சியடைந்தார்.
மேலும் போக்குவரத்து காவல் துறையினரும், களப்பணியாளர்களும் , அன்றாடம் வெயிலில் வேலை செய்யும் எளிய மக்களும் என் “Hand Free Umbrella” பயன்படுத்தி பயனடையும் போது அதுவே என் வெற்றி என விஷ்ணு தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்